சன் ரைசர்ஸ் அணியின் அபார ஆட்டம்: 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் RCB வீழ்த்தி SRH வெற்றி
ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 255 ஓட்டங்கள் இலக்கு
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டின் 67 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 56 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 79 ஓட்டங்களையும், கிளாசன் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.
55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
256 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 44 ஓட்டங்களும், கேப்டன் ரஜத் படிதார் 56 ஓட்டங்களும், க்ருனால் பாண்டியா 41 ஓட்டங்களும் குவித்தனர்.

இருப்பினும் பெங்களூரு அணியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், சகிப் ஹொசைன் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |