சிறந்த கேட்ச்சாக உணர்ந்தேன்..!ஆனால் விருது தர மறுக்கிறார்கள்: தோனி கிண்டல்
அவர்கள் இன்னும் சிறப்பான கேட்ச்சிற்கான விருதை எனக்கு தர மறுக்கிறார்கள் என தோனி நகைச்சுவையாக கூறி இருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது.
சென்னை அணி வெற்றி
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் குவித்தது.
Dhoni behind the stumps >>> ⚡️#CSKvSRH #IPL2023 pic.twitter.com/Uh4Yw3DBx0
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 21, 2023
135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிமையான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்னை அணி, 18.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் குவித்து போட்டியை வெற்றி பெற்றது.
விருது எனக்கு தரவில்லை
இந்நிலையில் போட்டியின் நிறைவுக்கு பிறகு, தொகுப்பாளரிடம் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டம். அதனால் நான் அனைத்தையும் ரசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “நான் இங்கே (சென்னையில்) இருப்பது நன்றாக இருக்கிறது, இவர்கள் மிகுந்த அன்பையும் பாசத்தையும் கொடுத்திருக்கிறார்கள், போட்டி முடிந்து தாமதம் ஆனாலும் நான் சொல்வதை கேட்க இவர்கள் காத்திருக்கிறார்கள்” என ரசிகர்களை குறிப்பிட்டு தோனி பேசினார்.
MS Dhoni in a fun mood with Harsha Bhogle :)
— Noir (@SachStoic) April 21, 2023
Always a pleasure watching these two talk. pic.twitter.com/tuwn70EnPX
இதற்கிடையில் விக்கெட் கீப்பிங் திறமை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த தோனி, “இவர்கள் இன்னும் சிறப்பான கேட்ச்சிற்கான விருதினை எனக்கு தர மறுக்கிறார்கள், இன்று நான் பிடித்த கேட்ச் மிகச்சிறந்த கேட்ச்-சாக நான் உணர்ந்தேன், ஏனென்றால் அந்த கேட்சை நான் பிடிக்கும் போது தவறான இடத்தில் இருந்து அதை கேட்ச் செய்தேன்” என்று தோனி நகைச்சுவையாக பேசினார்.
தீக்ஷனா வீசிய 12 ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ராமை சிறப்பான கீப்பிங் கேட்ச் மூலம் தோனி வெளியேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.