டோனியை ஓரங்கட்டிய அஜித் அகர்கர்! கோலி தலைமையில் ஆல்-டைம் ஐபிஎல் அணி அறிவிப்பு
இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் 11 பேர் கொண்ட ஆல் டைம் ஐபிஎல் அணியை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் லீக்குகளின் மிகப்பெரிய தொடராக கருத்தப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் மார்ச் 26 ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் ஐபிஎல் பிளேயிங் 11-ஐ ரிலீஸ் செய்துள்ளார்.
அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற தோனியின் பெயர் இல்லை. அந்த அணியின் கேப்டனாக விராட் கோலியை அகர்கர் தேர்வு செய்துள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் ஆபத்தான துடுப்பாட்ட வீரராக கருத்தப்படும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் அந்தஸ்தைக் கொடுத்துள்ளார்.
அவருடன் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கை மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார். நம்பர் 3 ஸ்பாட்டில் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை சேர்த்துள்ள அகார்கர், 4வது இடத்துக்கு விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
மிடில் ஆர்டரில் ஐந்து முறை மும்பை அணிக்கு சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மாவும், அவருக்கு அடுத்த இடத்தை ஏபி டிவில்லியர்ஸூக்கும் கொடுத்துள்ளார்.
பந்துவீச்சாளர்களில் 5 பேரை தேர்வு செய்துள்ளார் அகார்கர். மும்பை அணியின் நட்சத்திரமாக இருந்த லசித் மலிங்கா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அகார்கரின் ஆல்டைம் ஐபிஎல் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியில் ஜாம்பவான் டோனியின் பெயரை அவர் சேர்க்காதது ரசிகர்களுக்கு உண்மையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.