IPL 2022: சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் 3 தமிழக வீரர்கள்! முழு ஏல விவரம்.,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 8 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய 3 தமிழக வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பாண்டில் நடைபெறவுள்ள 15-வது IPL T-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அணிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்க நாளான நேற்று 74 வீரர்கள் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள். இதற்கான பட்டியலில் இடம்பெற்ற 600 வீரர்களில், 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ரூ. 16 கோடிக்கும், எம்.எஸ்.தோனி ரூ. 12 கோடிக்கும், மொயீன் அலி ரூ. 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 6 கோடிக்கும், ராபின் உத்தப்பா ரூ. 2 கோடிக்கும், டுவைன் பிராவோ ரூ. 4.4 கோடிக்கும், அம்பத்தி ராயுடு ரூ. 6.75 கோடிக்கும், தீபக் சாஹர் ரூ. 14 கோடிக்கும், கேஎம் ஆசிஃப் ரூ. 20 லட்சத்திற்கும், துஷார் தேஷ்பாண்டே, ரூ. 20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 13) கிறிஸ் ஜோர்டன் ரூ.3.6 கோடி, பகத் வர்மா ரூ.20, ஜெகதீசன் ரூ.20 லட்சம், ஹரி நிஷாந்த் ரூ.20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.