IPL Auction 2024: ரூ.2 கோடி அடிப்படை தொகை பிரிவில் வெறும் 3 இந்தியர்கள் தான்
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரூ.2 கோடி ரூபாய் அடிப்படை தொகை பிரிவில் 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
IPL Auction 2024
அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் ரூ.2 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான பிரிவில் வீரர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.
இந்த ஏலமானது வரும் 19 -ம் தேதி நடைபெற உள்ளது. அதிகபட்ச அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய் பிரிவில் மொத்தம் 23 பேர் இடம்பிடித்துள்ளனர். அதில் 3 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக ரூ.1.5 கோடி மற்றும் 1 கோடி பிரிவில் ஒரு இந்தியர் கூட இடம்பிடிக்கவில்லை.
ரூ. 2 கோடி பிரிவில் 3 இந்திய வீரர்கள்
1. ஹர்ஷல் படேல்
2. ஷ்ரதூல் தாக்கூர்
3. உமேஷ் யாதவ்
ரூ.50 லட்சம் பிரிவில் 11 இந்திய வீரர்கள்
1. மணீஷ் பாண்டே
2. கருண் நாயர்
3. ஜெய்தேவ் உனத்கட்
4. சேத்தன் சகாரியா
5. சிவம் மாவி
6. கே. எஸ். பாரத்
7. சந்தீப் வாரியர்
8. பரிந்தர் ஸ்ரான்
9. சித்தார்த் கவுல்
10. வருண் ஆரோன்
11. ஹனும விஹாரி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |