IPL Auction 2024: அதிக விலைக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ்.., ரூ.20.5 கோடிக்கு எடுத்தது SRH
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
IPL Auction 2024
அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே வரை 10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்கு, ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து மும்பைக்கும், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கும் தாவினர்.
இதனிடையே, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 2024 -ம் ஆண்டு ஐ.பி.எல்லில் இருந்து விலகினர்.
இந்நிலையில், இன்று துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரூ.20.5 கோடிக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ்
அப்போது, ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்ஸை தங்களுடைய அணிக்கு ஏலத்தில் எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் ரூ.10 கோடியை தாண்டியதும் மும்பை அணி விலகிக் கொண்டது.
பின்னர், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் சளைக்காமல் தொகையை உயர்த்திக் கொண்டே சென்றது. கடைசியில், 20.50 கோடி ரூபாய் வந்த பிறகு பெங்களூர் அணி விலகியது.
WOAH ??
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Pat Cummins is SOLD to Sunrisers Hyderabad ? for a whopping INR 20.5 Crore ??
Congratulations to the @SunRisers ?#IPLAuction | #IPL
இதனால், ஐதராபாத் அணி ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்சை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. முன்னதாக, பஞ்சாப் அணி சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது தான் அதிகமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |