ரெய்னாவை எடுக்கல.! இலங்கை வீரருக்கு வாய்ப்பா.? ட்ரெண்டிங்கில் #Boycott_ChennaiSuperKings
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனாவை ஏலத்தில் எடுத்திருப்பதால் ட்விட்டரில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் பெங்களுருவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (பிப்ரவரி 12, 13) நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் போட்டி போட்டு தங்களுக்கான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஏலத்தில் எடுக்கும் வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சிஎஸ்கே முதல் நாள் ஏலத்தில் அம்பாதி ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சஹர் என பழைய வீரர்களை குறிவைத்து ஏலத்தில் எடுத்தது.
ஆனால் இந்த மெகா ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்தவரும், மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த வீரருமான சுரேஷ் ரெய்னா இந்த ஏலத்தில் விலைப்போகவில்லை. சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
Thu, you should be ashamed to allow #GenocideSrilanka representing player inside TN , country which massacred tens&thousands of our Tamils, with still no justice !
— فيجاي ?سهانا (@sahana_xo) February 13, 2022
CSK lost my respect ? #Boycott_ChennaiSuperKings https://t.co/EbgF11q6OM
மேலும் 2-வது சுற்றிலும் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.
ப்ளே ஆஃப் சுற்றுகளில் பலமுறை சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தவர். ஆனால் சுரேஷ் ரெய்னாவை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாங்கவில்லை என்பதை சிஸ்கே ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காதது ஒரு பக்கம் வேதனையாக இருந்த நிலையில், இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா என்பவரை ரூ. 70 லட்சத்துக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது ரசிகர்களிடம் வெறுப்பை சாம்பாதித்துள்ளது.
Broken ????
— Gourav Chattaraj (@i_amGourav) February 14, 2022
They have enough balance to bring him home but they did nothing.
Suresh Raina ❤️
Love and respect always.
This video made me cry ?#Boycott_ChennaiSuperKings pic.twitter.com/s2VGOxCt2j
சென்னை அணியில் ஏற்கனவே இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் விளையாடி வந்த போது சிஎஸ்கே அணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை சிஎஸ்கே தனது அணியிலிருந்து விடுத்ததால் அப்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
மேலும் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் சிஎஸ்கே இலங்கை அணி வீரரை ஏலத்தில் எடுத்துள்ளதாலும் ரெய்னாவிற்கு வாய்ப்பு வழங்காத காரணத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையடுத்து ட்விட்டரில் ரெய்னாவுக்கு ஆதரவாகவும், இலங்கை வீரருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் #Boycott_ChennaiSuperKings மற்றும் #GenocideSrilanka என்ற ஹஷ்டேகுகளை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Remove Srilankan Players....#Boycott_ChennaiSuperKings pic.twitter.com/zjIaIio3AM
— SEEMANISM ARMY ? (@SeemanismNtk) February 14, 2022
#Boycott_ChennaiSuperKings
— Rohith Musulla (@Rohith_Musulla) February 14, 2022
Raina ??? pic.twitter.com/bJIvbq3Xnr