IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்த தமிழ்ப்பெண்! யார் இந்த காவியா மாறன்?
ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் இருந்தபோதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் காவியா மாறன் சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பிரபலமாக இருந்தார்.
உலகப் புகழ்பெற்ற சன் குழுமத்தின் (Sun Group) தலைவர் மட்டும் நிறுவனருமான கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் இந்த காவியா மாறன். IPL-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக உள்ளார் காவியா மாறன்.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் 2022 ஏலத்தில், 30 வயதான காவியா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இயக்குநர் டாம் மூடி (Tom Moody), பந்துவீச்சு வழிகாட்டி முத்தையா முரளிதரன் ஆகியோருடன் காணப்பட்டார்.
காவியா மாறன் முதன்முதலில் ஐபிஎல் 2018 சீசனில் தொலைக்காட்சியில் காணப்பட்டார், அங்கு அவர் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் SRH-க்கு ஆதரவாகக் காணப்பட்டார். கடந்த ஆண்டு ஏலத்தின் போதும் காவியா மாறன் சமூக ஊடகங்களில் டிரெண்டாக இருந்தார், ட்விட்டரில் பயனர்கள் அவரை SRH auction girl என்று குறிப்பிட்டனர்.
நேற்றும் இன்றும் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 600 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றனர். ஏலத்திற்கு முன்னதாகவே, கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி) மற்றும் உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகிய மூன்று வீரர்களை SRH தக்க வைத்துக் கொண்டது.
Just Belive in Kavya Maran Supermancy ❤️🤞 pic.twitter.com/rEKq7EZKez
— Harsha Tarak 🌊 (@HarshaTarak8) February 11, 2022
சனிக்கிழமை காலை நடைபெற்ற ஏலத்தில் முன்னணி வீரர்களை ஏலம் விட்ட போதும், ஐதராபாத் அணி ஒரு வீரரை கூட வாங்காமல் இருந்தது. ரூ.68 கோடியை கையில் வைத்திருந்தும் பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்தது.
பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு தனது முதல் ஏலத்தில் ஸ்பெஷல் வீரரை எடுத்தது. அவர் வேறு யாரும் இல்லை, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான். ஆல்ரவுண்டரான இவரை எடுக்கவும் கடும் போட்டி நிலவி வந்தது. எப்படியாவது ஒரு வீரரையாவது ஏலம் எடுத்து தனது ரேஸை தொடங்கியே ஆக வேண்டும் என்ற சூழலில் இருந்த அந்த அணி எதிர்காலத்திற்கு உதவுவார் என சுந்தரை ரூ. 8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
Kavya Maran is Breathtaking to be very honest. pic.twitter.com/gBXO6PRUwz
— VamosHesson (@VKcertifiedd) February 13, 2022
சுந்தரை ஏலம் எடுத்தவுடன் ஐதராத்பாத் அணி உரிமையாளர் காவியா மாறன் திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். நீண்ட நேரமாக பொறுமை காத்ததற்கு ஒரு சிறந்த வீரர், அதுவும் தமிழகத்தை சேர்ந்த வீரரை ஏலம் எடுத்துவிட்டதாக அவர் பெருமை கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்தநிலையில், இந்த இரண்டு நாட்களாக காவியா மாறன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகவும் பிரபலமாகிவருகிறார். ஏல மேசையில் காவியா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூகுள் தேடல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் 'யார் காவியா மாறன்' மற்றும் 'எஸ்ஆர்ஹெச் உரிமையாளர் யார்' போன்ற கேள்விகள் அதிகமாக தேடப்படுகின்றன .