ஐபிஎல் ஏலம்! இந்த வீரருக்கு போய் இத்தனை கோடியா? ஏமாந்து போன பிரபல அணி
ஐபிஎல் ஏலம் நேற்று படுஜோராக நடந்த நிலையில் சில வீரர்களை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கி முன்னணி அணிகள் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.
பூரனுக்கு இவ்வளவு விலையா?
அதன்படி லக்னோ அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. கடந்த முறை ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு விளையாடிய பூரன் 14 போட்டிகளில் 306 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதற்கு முந்தைய சீசனில் 12 போட்டியில் விளையாடி 85 ரன் மட்டுமே நிக்கோலஸ் பூரான் சேர்த்தார். அதன்படி பூரணுக்கு 16 கோடி என்பது மிகவும் அதிகம் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
IPLT20.COM
ஜேசன் ஹோல்டர்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் அணி 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அவர் பெரிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தியது இல்லை.
இதேபோன்று நடப்பு சாம்பியன் ஆன குஜராத் வேகப்பந்துவீச்சாளர் சிவம் மவிக்கு 6 கோடி ரூபாய் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவம் மவி காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை. சிவம் மவிக்கு அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
Twitter