IPL ஏலத்தில் 200 கோடிக்கு விலை போகும் பாகிஸ்தான் வீரர்? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
IPL ஏலத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இடம்பெற்றிருந்தால் 200 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டு இருப்பார் என பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூகஊடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
உலகில் நடத்தப்படும் கிரிக்கெட் லீக் தொடர்களில் IPL தான் மிக அதிக பணம் கொட்டும் லீக் தொடராக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களால் பார்க்கப்படுகிறது.
2008 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் சீசனில் ஷாஹித் அப்ரிடி, சோயிப் அக்தர் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் உட்பட அனைத்து நாடு கிரிக்கெட் வீரர்களும் பங்குபெற்று விளையாடினர்.
ஆனால் அதன் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனையால் அடுத்தடுத்த IPL தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சில சமயங்களில் பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தாலும், அதற்கான எதிர்ப்பு குரல்களும் உடனே கிளம்புவதால் பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் தான் இன்றுவரை IPL போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த பதிவில் IPL ஏலத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இடம்பெற்றிருந்தால் 200 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டு இருப்பார் என பதிவிட்டுள்ளார்.
If, Shaheen Shah Afridi was in #IPLAuction. He would’ve gone for 200 crores.
— Ihtisham Ul Haq (@iihtishamm) February 13, 2022
If stupidity has height, this is it ? https://t.co/ce8F1bNW61
— Kamehamehaaaa (@Kamehamehaaaa7) February 14, 2022
இந்த கருத்தை படிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் அந்த செய்தியாளரின் கவனத்தை ஈர்க்கும் திட்டம் வெற்றிபெறவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.