ஐபிஎல் ஏலத்தில் பிரபலமான ஆசிய அணி ஆல்ரவுண்டர் ஏன் விலை போகவில்லை? காரணத்தை கூறிய மனைவி
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் உல் ஹசன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத காரணத்தை அவர் மனைவி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஷகிப் உல் ஹசன் திகழ்கிறார். இரண்டு நாட்கள் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை, ஷகிப்புக்கு அடிப்படை தொகையாக ரூ 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுவரையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். ஷகிப் ஏலத்தில் எடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்நிலையில் இதற்கான காரணத்தை அவர் மனைவி உம்மி அகமது ஷிஷிர் வெளியிட்டுள்ளார். அவரின் பேஸ்புக் பதிவில் விமர்சகர்களை கடுமையாக சாடினார் மற்றும் வங்கதேச ஆல்ரவுண்டரை ஏலத்திற்கு முன்னதாக இரண்டு உரிமையாளர்கள் அணுகியதாக கூறினார்.
அந்த சமயத்தில் ஷகிப் அவர்களிடம், ஐபிஎல் சீசன் முழுவதிலும் தன்னால் விளையாட முடியாது என கூறியிருக்கிறார். இதன் காரணமாக அவர் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
துரதிர்ஷ்டவசமாக இலங்கை தொடரின் காரணமாக அவரால் முழுவதுமாக பங்கேற்க முடியவில்லை என கூறிவிட்டார். அதனால் தான் ஷகிப் தேர்ந்தெடுக்கப்படவில்லை, இது பெரிய விஷயமல்ல, இது முடிவல்ல, அடுத்த ஆண்டு என்பது எப்போதும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.