ஐபிஎல் இனி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வருமா? போட்டியாக ஏலத்தி வரும் இரண்டு சேனல்கள்
ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டு சேனல்கள் ஒன்று சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பணம் அதிகம் விளையாடும் போட்டியாக ஐபிஎல் தொடர் உள்ளது. அடுத்த ஆண்டு 15-வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது. இந்த முறை 10 அணிகள் மோதவுள்ளன. இந்த ஐபிஎல் தொடரை கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதனை அப்போது 16,347.50 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலத்தில் எடுத்திருந்தது.
இதையடுத்து வரும் 2023-ஆம் ஆண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரையிலான ஏலத்திற்கு 40,000 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்படுகிறது. இது பழைய ஒப்பந்தத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
பிசிசிஐ தலைவர கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதில் இந்த முறை 40,000 கோடிக்கும் மேல் ஏலத்தொகை சுலபமாக எகிறும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், இந்த ஏலத்திற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் என பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து தற்போது, இந்த உரிமத்தை பெற சோனி நிறுவனம் மற்றும் Zee Entertainmentநிறுவனமும் ஒன்றிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர்கள் தற்போதைய மதிப்பாக சுமார் 15,000 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.