இன்னும் சில தினங்களில் ஐபில் மெகா ஏலம்! கோடிகளை அள்ளப்போகும் வீரர்கள்... புதிய தகவல்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2022க்கான ஏலம் வரும் 12 மற்றும் 13 திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு ஐபில் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஐபிஎல் ஏலம் தொடர்பிலான முக்கிய தகவல்கள்
ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்து மொத்தமாக 1214 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 896 வீரர்கள் இந்திய வீரர்கள் ஆவர், 318 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இதில் மொத்தமாக 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
தற்போதுள்ள பழைய எட்டு அணிகள் ஏலத்திற்கு முன்னதாக அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன, அதில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டுத் வீரரை தக்கவைக்க முடியும்.
எடுத்துக்காட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி (ரூ.12 கோடி), ஜடேஜா (ரூ. 16 கோடி), மொயின் அலி (ரூ. 8 கோடி), ருத்துராஜ் கெய்க்வாட் (ரூ 6 கோடி) தக்க வைத்துள்ளது.
அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் தலா ரூ 90 கோடி வரை ஏலத்தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய வெளிநாட்டு வீரர்கள்:
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், ஷகிப் உல் ஹசன், முஸ்தாபிசூர் ரகுமான், இயன் மோர்கன், குயிண்டன் டீ காக், வனிந்து ஹசரங்கா, சமீரா, குசல் மெண்டீஸ், அகிலா தனஞ்செயா, அவிஸ்கா பெர்ணாண்டோ, தனுஷ்கா குணத்திலாகா, பிராவோ, ஜேசன் ஹோல்டர்