ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... வெளியான முக்கிய தகவல்
பாதியில் ரத்தான இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் இங்கு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடந்த வாய்ப்புள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் சனிக்கிழமை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.