ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி! புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஐபிஎல் 15-வது சீசனில் புனேவில் நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டங்களில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ஓட்டங்களிலும், அஜிங்கியா ரஹானே 28 ஓட்டங்களிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ஓட்டங்களிலும், ரிங்கு சிங் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.
இதையடுத்து, 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய ஐதராபாத் அணி. தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடித்தார். கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதியும் தலா 9 ஓட்டங்களுடன் வெளியேறினர். மார்க்ரம் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது.
பிளேஆப்:
தற்போதைய நிலவரப்படி, குஜராத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மும்பை, சென்னை அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.
லக்னோ அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றுவிட்டால், பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும். மீதமுள்ள ஆறு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022