அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டன்! ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி
2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 15-வது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத்டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் முதலில் துடுப்பாட முடிவு செய்தார்.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக பிரியம் கார்க், அபிஷேக் சர்மா களமிறங்கினர். 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரியம் கார்க், ரபாடா பந்துவீச்சில் கேப்டன் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவரும் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்து நடையைக்கட்ட, சிறப்பாக விளையாடிவந்த அபிஷேக் சர்மா 43 ஓட்டங்களில் ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பஞ்சாப் அணி ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. பூரன் 5 ஓட்டங்களிலும் மார்க்ரம் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி 5 ஓவரில் வாஷிங்டன் சுந்தர் - ரொமாரியோ ஷெப்பர்ட் ஜோடி அதிரடி காட்டினர். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வவீரர்களாக களமிறங்கிய தவான், பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பேர்ஸ்டோவ் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த ஷாருக்கான் ஓட்டங்களிலும் 19 கேப்டன் அகர்வால் 1 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.ஷிகர் தவான் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 49 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் அடித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிபட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.