எனது ஹீரோ தோனியின் கீழ் விளையாட போறேன்! CSK அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் மகிழ்ச்சி
எனது ஹீரோ தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற எனது நெடுநாள் கனவு இப்போது பலித்துள்ளது என்று ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷிவம் தூபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்து பேசிய தூபே, எனது ஹீரோ தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற எனது நெடுநாள் கனவு இப்போது பலித்துள்ளது.
அவரது தலைமையில் நான் விளையாட உள்ள நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். நிறைய வீரர்கள் அவரது கேப்டன்சியின் கீழ் நம்பிக்கையுடன் விளையாடியாதை பார்த்துள்ளேன்.
இப்போது அந்த அனுபவம் எனக்கும் கிடைக்க உள்ளது என கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிக்காக தூபே இதுவரை விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.