ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஆட்டம் மழை காரணமாக திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு யாருமே எதிர்பாராத வகையில் மழை கொட்டி தீர்த்தது.
To everyone involved in the final with #Yellove ... #CSKvGT #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/I8gIuhDvPY
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023
இதனால் போட்டி சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு 9 மணிக்கு மைதானத்தில் நடுவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மைதானத்தின் தன்மை மிகவும் மோசமானதாக இருப்பதால் போட்டியை திட்டமிட்டபடி 12:06க்குள் தொடங்க முடியாது என மைதான ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் வேறு வழி இன்றி ஐபிஎல் இறுதிப் போட்டியை ரிசர்வ் டே ஆன திங்கட்கிழமை நடத்தலாம் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் திங்கட்கிழமையும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் திரண்டிருந்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.