லண்டனில் முதல் பார்வையிலேயே முளைத்த காதல்! 15 நிமிடங்களில் முடிவான திருமணம்... புகைப்படங்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.
இந்த வெற்றியில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹராவின் பங்கு அளப்பரியது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக திகழ்ந்தவர் நெஹரா.
பலருக்கு அவரின் காதல் கதை குறித்து தெரியாமல் இருக்கும். அது குறித்து காண்போம். நெஹராவின் மனைவி பெயர் ருஷ்மா. இவர்களின் காதல் கதை சுவாரசியமானது.
கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட ருஷ்மா கடந்த 2002ல் லண்டன் ஓவலில் நடந்த இந்தியா - இங்கிலாந்து போட்டியை காண சென்றார். அப்போது தான் முதன் முதலில் ருஷ்மாவை நெஹரா பார்த்தார், பார்த்த முதல் பார்வையிலேயே அவர் மீது நெஹராவுக்கு காதல் வந்தது.
இருவரும் செல்போன் நம்பரை ஒருவருக்கு ஒருவர் மாற்றி கொண்டனர். பின்னர் தனது காதலை நெஹரா வெளிப்படுத்த ருஷ்மாவால் அதை நம்பமுடியவில்லை, இதன் பிறகு காதலை அவர் ஏற்று கொண்டார்.
இருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதாவது 15 நிமிடங்களுக்குள் முழு திருமணமும் திட்டமிடப்பட்டு ஒரு வாரத்தில் அவர்களின் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த தம்பதிக்கு அரியனா மற்றும் ஆருஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.