எப்படியிருந்த மனுஷனுக்கு இந்த நிலையா? ஐபிஎல் போட்டியில் நட்சத்திர வீரர் வார்னர் செயலை பார்த்து ரசிகர்கள் ஷாக்..வைரல் வீடியோ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வேலையை பார்த்த நட்சத்திர வீரர் வார்னரின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற 29 போட்டிகளில் பல சுவாரசிய நிகழ்வுகள் நடந்தன. அதில் ஒன்று ஹைதராபாத் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தொடர்புடையது.
இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது கடந்த புதன்கிழமை (28.04.2021) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
David warner having a race for drinks ???#IPL2020 #SRHvRR #srh #DavidWarner pic.twitter.com/jEQPs0kbpD
— Trollmama_ (@Trollmama3) May 2, 2021
இதனை அடுத்து திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் விடுவிக்கப்படுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்தது.
அடுத்த நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் விளையாட ப்ளேயின் லெவனில் வார்னரின் பெயர் இடம்பெறவில்லை.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் அந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், வீரர்களுக்கு தண்ணீர், கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் செல்லும் வேலையை வார்னர் செய்துக்கொண்டிருந்தார்.
அப்போது சக வீரர் ஒருவருடன் தண்ணீர் பாட்டிலை எடுக்க விளையாட்டாக சண்டையிட்டு வார்னர் சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஒரு காலத்தில் எப்படி இருந்த வீரரை இதுபோல் பார்க்கும்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.