ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? உற்சாகத்தில் அணி நிர்வாகங்கள்!
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றியாளர், இரண்டாம் இடம் பிடிக்கும் ரன்னர் அப், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் வெற்றியாளர் போன்றவைக்கான பரிசு தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் திகதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை செய்யவுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு இருப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிபெறும் அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் அடிப்படையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையும், ரன்னர் அப் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக ரன் குவிக்கும் ஆரஞ்சு கேப் வீரருக்கு 15 லட்சமும், அதிக விக்கெட்களை எடுக்கும் வீரருக்கு 15 லட்சமும் பரிசு தொகையாக அறிவிக்கப்ட்டுள்ளது.
ஐபிஎல் வெற்றியாளர் அணிக்கு = 20,00,00,000 கோடி
ஐபிஎல்-லில் ரன்னர் அப் அணிக்கு =13,00,00,000 கோடி
கோடி பிளேஆஃப் மூன்றாவது அணி = 7,00,00,000 கோடி
பிளேஆஃப் நான்காவது அணி = 6,50,00,000 கோடி
சூப்பர் ஸ்ட்ரைக்கர் = 15,000,00 லட்சம்
அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் = 12,00,000 லட்சம்
2022ம் ஆண்டின் பவர் பிளேயர் = 12,00,000 லட்சம்
இந்த ஆண்டின் மதிப்புமிக்க வீரர் = 2,00,000 லட்சம்
இந்த ஆண்டின் Game Changer = 12,00,000 லட்சம்
வளர்ந்து வரும் வீரர் = 20,00,000 லட்சம்
ஆரஞ்சு தொப்பி (அதிக ரன்) = 15,00,000 லட்சம்
பர்ப்பிள் தொப்பி (அதிக விக்கெட்) = 15,00,000 லட்சம்