பெங்களூருக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ! விழி பிதுங்கும் கோலி: கடைசி போட்டி நேரம் மாற்றியதன் பின்னணி
ஐபிஎல் தொடரில் கடைசிப் போட்டி மாற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் இந்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்பட்டது.
அதன் பின் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட, இந்த தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாகம், இரண்டாம் என முன்னாள் வீரர்களால் பிரிக்கப்பட்டு கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த முறை வழக்கம் போல் இல்லாமல், கடைசி லீக் போட்டிகள் இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெறும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இது ஏன் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது.
ஏனெனில் கடைசி லீக் போட்டி நடைபெறும் அன்றைய தினம், அன்றைய தினம் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கும், அதே போன்று அன்றைய தினத்தில் இரவு 7 மணிக்கு பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கவிருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் தான் தற்போது ஒரே நேரத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது இருக்கும் புள்ளிப்பட்டியல் தானாம், ஏனெனில் இப்போது இருக்கும் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை பல அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றன.
இதனால் இதில் ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும். பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கு வெற்றி தோல்விகளை தாண்டி, நெட் ரன் ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே கடைசி போட்டியில் விளையாடும் அணி, முந்தைய போட்டியின் முடிவை அறிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டுவிடும். எனவே அப்படிபட்ட கூடுதல் பலனை அடையாமல் இருப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடைசி லீக்கின் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இதில் டெல்லி அணி கிட்டத்தட்ட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை பெங்களூரு அணிக்கு வெற்றி மற்றும் ரன் ரேட் முக்கியம். இதில் கொல்கத்தாவிற்கு மிக நெருக்கமாகவே பெங்களூரு உள்ளது.
ஒரு வேளை அன்றைய தினம் மதியம் நடைபெறவிருந்த போட்டியின் முடிவுகளின் படி, பெங்களூரு அணிக்கு கூடுதலாக ரன் ரேட் மட்டும் தேவைப்படலாம். அப்படி ரன் தேவைப்படும் போது, அந்த அணி வெற்றி, தோல்விகளை கண்டுக்கொள்ளாது.
டெல்லி அணியை முடிந்தவரை குறைந்த ஓவருக்குள் சுருட்ட நினைப்பதற்கே அதிகம் முயற்சிக்கும்.
அப்போது ரன் ரேட் கூடி, சுலபமாக புள்ளிப்பட்டியலில் முன்னேறி ப்ளே ஆப்-க்கு செல்லும்.
இது ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதாலே பிசிசிஐ இப்படி ஒரு முடிவு என்று கூறப்படுகிறது.