CSK ரசிகர்களை சோகமாக்கிய ஐபிஎல் பட்டியல்! இப்படி பண்ணீட்டாங்களே என அனைத்து ரசிகர்களும் புலம்பல்
ஐபிஎல் பட்டியல் இந்த முறை அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால், அது குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்த முறை வரும் மே மாதம் 7-ஆம் திகதி துவங்குகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் அந்த அட்டவணையை பார்த்த பின் சோகமாகினர்.
Dei pasangala, #IPL2021 to happen between April 9 and May 30, schedule is out.
— Srini Mama (@SriniMaama16) March 7, 2021
Good news: 10 games, including the opener in Chennai
Bad News: CSK won't play home games in Chennai
Good News: No team plays any home games, all will play in neutral venues
ஏனெனில், இந்த முறை ஐபிஎல் அணிகள் அனைத்துமே அதன் சொந்த மைதானத்தில் ஆடவில்லை. அனைத்து அணிகளுமே மாறி, மாறி மைதானத்தில் விளையாடுகின்றன.
இதை எந்த ஒரு ஐபிஎல் அணி நிர்வாகமும் எதிர்பார்க்கவில்லை, ஐபிஎல் ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் சென்னை, மும்பை, போன்ற ரசிகர்கள் தங்கள் மைதானங்களில் தங்கள் அணி விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே சமயம் ஒரு சிலர் இது ஒரு அருமையான ஐடியா என்று பதிவிட்டு வருகின்றனர்.