நடுவர்களை விமர்சித்த அஸ்வின்..!அதிரடி நடவடிக்கை எடுத்த ஐ.பி.எல் நிர்வாகம்
சென்னை அணியுடனான நேற்றைய போட்டியின் போது கள நடுவர்களின் முடிவை வெளிப்படையாக விமர்சனம் செய்த ராஜஸ்தான் வீரர் அஸ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
அசத்திய அஸ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியில் களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங்கில் 22 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும் பந்துவீச்சில் 25 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது, கள நடுவர்களின் முடிவை வெளிப்படையாக விமர்சனம் செய்த ராஜஸ்தான் வீரர் அஸ்வின் மீது ஐபிஎல் நிர்வாகம் 25% அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
What it means. ??? pic.twitter.com/I3Xjbzzf5l
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2023
போட்டியின் போது பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் தானாகவே பந்தை மாற்றியதை அடுத்து அஸ்வின் அதற்கு எதிராக விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.