ஐபிஎல் கோப்பையை இந்த அணி ஜெயிக்குற வரை திருமணம் செய்யமாட்டேன்! கறார் காட்டும் பெண்.. புகைப்படங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்காக ரசிகர்கள் வைத்திருக்கும் பேனர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் போது ரசிகர் ஒருவரின் கையில் வைத்திருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர் வைத்திருந்த பேனரில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தால் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதேபோல பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி ரசிகையின் பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த ரசிகை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.
போட்டியின் போது வைத்திருந்த பேனரில் விராட் கோலி தனது 71-வது சதத்தை எப்போது அடிக்கிறாறோ அப்போதுதான் நான் டேட்டிங் செய்வதாக இருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது. 22-லீக் போட்டியில் பெங்களூர்- சென்னை அணிகள் மோதியது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் ரசிகையின் பேனர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருந்தது.
அவர் வைத்திருந்த பேனரில், பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என இருந்தது. இப்படி பல பேனர்கள் வித்தியாசமான வாசகங்களுடன் வைரலாகியுள்ளது.