ஐபிஎல் மெகா ஏலம் எப்போது... எங்கே நடைபெறுகிறது? வெளியான முக்கிய தகவல்
அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன் படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம், ஜனவரி(2022) மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்த முறை வழக்கம் போல் 8 அணிகள் இல்லாமல், புதிதாக லக்னோ மற்றும் ஹைதராபாத் என மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளதால், மெகா ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. பழைய அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன் படி ஒரு சில அணி மூன்று பேர், இரண்டு பேர், நான்கு பேர் என தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதம் நடைபெறவிருந்த ஏலம், தற்போது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும், இந்த ஏலம் பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.