IPL 2025 மெகா வீரர்கள் ஏலம்: திகதி மற்றும் இடத்தை அறிவித்தது BCCI
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என்று BCCI அறிவித்துள்ளது.
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம்
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ம் திகதி நடைபெறும் என BCCI அறிவித்துள்ளது.
மேலும் இந்த வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் வைத்து நடைபெறும் என்றும் BCCI தெரிவித்துள்ளது.
அக்டோபர் 31ம் திகதி மாலை 5 மணிக்கு ஐபிஎல் அணிகள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் எண்ணிக்கை
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 1575 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 320 வீரர்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடத 1225 வீரர்களுடன் அசோசியேட் நாடுகளை சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 91 பேர் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
✍️ 1574 Player Registrations
— IndianPremierLeague (@IPL) November 5, 2024
🧢 320 capped players, 1,224 uncapped players, & 30 players from Associate Nations
🎰 204 slots up for grabs
🗓️ 24th & 25th November 2024
📍 Jeddah, Saudi Arabia
Read all the details for the upcoming #TATAIPL Mega Auction 🔽🤩
அவுஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்ச வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக 204 வீரர்கள் வாங்கப்பட உள்ள நிலையில், 10 அணிகளிடமும் சேர்த்து அவர்களை வாங்குவதற்காக சுமார் 641.5 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |