சிக்கலில் சிக்கிய பஞ்சாப் அணி - முக்கிய நபர் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று தொடங்கவுள்ள நிலையில் பஞ்சாப் அணியில் மோதல் வெடித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பஞ்சாப் அணியில் பநிர்வாகிகளுக்கு இடையே ஏற்கனவே மோதல் இருந்ததால் அணியில் தொடர விரும்பவில்லை என்று கூறி கே.எல்.ராகுல், ஷாரூக்கான் ஆகியோர் விலகினர். இதனால் மயங்க் அகர்வால் மற்றும் அர்தீப் சிங் ஆகியோரை மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் பஞ்சாப் அணி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளார்.
அதேபோல் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக ஏலத்திற்காக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் தற்போது தனிப்பட்ட காரணங்களால் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது பஞ்சாப் அணி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.