இன்று ஐபிஎல் மெகா ஏலம்! இதில் கலந்து கொள்ளும் பணக்கார அணி எது தெரியுமா? CSK இல்லை
2022 ஐபிஎல் ஏலம் இன்று நடக்கவுள்ள நிலையில் அதிக பணத்தை கையிருப்பில் வைத்துள்ள பணக்கார அணி குறித்து தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலம் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக ரூ.72 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவே ஒரு அணி கையிருப்பில் வைத்துள்ள அதிக தொகையாகும்.
அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கையிருப்பில் ரூ. 48 கோடி உள்ளது.
மொத்தமுள்ள ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தான் குறைந்த அளவிலான கையிருப்பு பணம் உள்ளது.
அதன்படி அவர்களிடம் ரூ. 47.5 கோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.