நான் திரும்பி வந்துடேன்...ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.பி.டிவில்லியர்ஸ்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் நிச்சியமாக பங்கேற்பேன் என 360 டிகிரி அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.பி.டிவில்லியர்ஸ், இதுவரை 11 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4,491 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
ஆனால் அவர் கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தை தொடர்ந்து அவர் ஆர்.சி.பி அணிக்காகவும் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக இனி ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, ரசிகர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியாக விராட் கோலியும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இப்படி அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் மிகுந்த வருத்ததில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்துயுள்ளது.
அதில், நான் ஐபிஎல்-லில் மீண்டும் பங்குபெற போவதாக விராட் கோலி உறுதிப்படுத்திய செய்தியை கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் உண்மையை சொல்லவேண்டும் என்றால் நாங்கள் எதையும் இன்னும் உறுதிசெய்யவில்லை.
நான் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன் ஆனால் என்னவாக இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு சில போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் இருக்கலாம் என்ற ட்வீட் ஒன்றை பார்த்தேன், அதில் இருந்து நமது இரண்டாவது வீடான பெங்களூருவுக்கு திரும்பும் எண்ணம் எனக்கு தோன்றியது, மேலும் கூட்டம் நிரம்பி வழியும் சின்ன ஸ்வாமி ஸ்டேடியமை பார்க்க ஆசைப் படுகிறேன் என ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.