சிஎஸ்கே அணியில் இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...தோனி உருக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வை செய்தது, இதனைத் தொடர்ந்து டாஸ்க்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்தார்.
ஜடேஜா போன்ற ஒருவர், வெவ்வேறு கலவையான ஆட்டங்களை முயற்சிக்க உதவுபவர் என்றும் தோனி தெரிவித்துள்ளார்.
மேலும் கடுமையான போட்டி இருக்கும் போது, எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நீங்கள் உங்களது பணியை செய்ய வேண்டும் மற்றும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ”கோட்ட கோ காம” போராட்டம் தொடரும்... இலங்கை பிரதமர் அறிவிப்பு!
பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற சென்னை அணிக்கு அடுத்துவரும் அனைத்து போட்டிகளும் மிக முக்கியமானதாக கருத்தப்படும் நிலையில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.