ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று தொடக்கம்! CSK அணியின் இருப்பு தொகையாக எவ்வளவு கோடிகள் உள்ளது தெரியுமா?
ஐபிஎல் டி 20 தொடரின் 14-வது சீசனுக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தஆண்டுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று பிற்பகல் 3 மணிஅளவில் நடைபெறுகிறது.
ஏலத்துக்கான இறுதிப்பட்டியலில் 164 இந்தியவீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள்,உறுப்புநாடுகளைச் சேர்ந்த 3 வீரர்கள் என மொத்தம் 292 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 61 வீரர்களை 8 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கைவசம் ரூ.19.90கோடி இருப்பு உள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 6 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டியது உள்ளது.
ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டதால் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான் மொயின் அலி ஆகியோரை சிஎஸ்கே குறிவைக்கக்கூடும். சுழற்பந்து வீச்சைபலப்படுத்தும் விதமாக கிருஷ்ணப்பா கவுதம், ஜலஜ் சக் ஷேனா, ஷாய் கிஷோர் ஆகியோரை வளைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.