ஐபிஎல் ஏலத்தில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர்! பிரபல வீரருக்கு புகழாரம்
ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஹர்ஷல் படேல் தகுதியானவர் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ஹர்ஷல் படேல் ரூ 10.75 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடந்த முறை அவருக்கான ஊதியம் ரூ.20 லட்சமாக இருந்தது.
தற்போது ஹர்ஷல் படேலை பெங்களூர் அணி அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் தக்கவைத்துக் கொண்டது. அவர் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், கடந்த ஆண்டு ஹர்ஷல் படேல் ஐ.பி.எல். போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஏலத்தில் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். ஹர்ஷல் படேலின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்து கொள்கிறார். பந்துவீச்சில் நிறைய விஷயங்களை கற்றுள்ளார்.
அதில் இருந்து அவர் மேம்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் விடும் வகையில் பந்து வீசுகிறார் என புகழ்ந்து பேசியுள்ளார்.