இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு திருமணம் முடிந்தது: வெளியான தம்பதியின் அழகிய புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரரான விஜய் சங்கர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
விஜய் சங்கருக்கும் வைஷாலி விஸ்வேஷ்வரன் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த தகவலை ஐதராபாத் சன் ரைசர்ஸ் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், இந்த சிறப்பு வாய்ந்த நாளில் விஜய் சங்கருக்கு எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும் என கூறப்பட்டுள்ளது.
Sending our best wishes to @vijayshankar260 on this very special day!
— SunRisers Hyderabad (@SunRisers) January 27, 2021
May you have a happy and blessed married life ??#SRHFamily #OrangeArmy #SRH pic.twitter.com/elDUYKVww2