ஐபிஎல் புதிய தக்கவைப்பு விதிகள் வெளியானது! சென்னை அணியால் தோனியை தக்கவைக்க முடியமா?
2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக புதிய தக்கவைப்பு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடர் முடிந்த நாள் முதல் சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பாரா என கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
எனினும், புதிய தக்கவைப்பு விதிகள் வெளியான பின் தான் அதற்கு விடை கிடைக்கும் என தோனியே கூறிவிட்டார்.
இதனிடையே, ஏலத்தில் சென்னை அணி முதல் வீரராக தோனியை தான் தக்கவைக்கும் என அணி தரப்பில் உறுதியாக தெரிவித்தது.
இந்நிலையில், புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது புதிய தக்கவைப்பு விதிகள் வெளியாகியுள்ளது.
புதிய தக்கவைப்பு விதிகளின் படி, பழைய அணிகள் 4 (3 இந்திய வீரர்களை, 1 வெளிநாட்டு வீரரை) அல்லது (இரண்டு இந்திய வீரர்களை, 2 வெளிநாட்டு வீரர்களை) தக்கவைத்துக்கொள்ளலாம்.
அதேசமயம் புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ ஏலத்திற்கு முன் மீதமுள்ள player pool-ல் இருந்து மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.