IPL தொடரில் புதிதாக 2 அணிகளை இணைக்க பரிசீலனை; எந்த நகரங்களில்?
ipl to get 2 new teams in 2028 pune and vadodara: 2008 ஆம் ஆண்டில் 8 அணிகளுடன் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது 10 அணிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2028 ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகளை தொடரில் இணைப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக Mint ஊடகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
IPL தொடரில் புதிதாக 2 அணிகள்
இதில், மகாராஷ்டிராவின் புனே மற்றும் குஜராத்தின் வதோதரா ஆகியவை சாத்தியமான இடங்களாக உருவெடுத்துள்ளன.

புனே ஏற்கனேவே ஐபிஎல் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவத்தை வைத்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் கொச்சி டஸ்கர்ஸ் உடன் ஐபிஎல் தொடரில் இணைந்த புனே வாரியர்ஸ் இந்தியாவை சஹாரா குழுமம் நிர்வகித்தது.
2013 ஆம் ஆண்டில் தொடரின் வருடாந்திர உரிமக் கட்டணத்தின் மதிப்பீடு தொடர்பாக பிசிசிஐ உடன் ஏற்பட்ட நிதி வேறுபாடுகள் காரணமாக புனே வாரியர்ஸ் இந்தியா IPLலிருந்து விலகியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் தடை செய்யப்பட்ட போது, 2016 ஐபிஎல் தொடரில் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இணைந்தது.
ஆர்.பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்திற்கு சொந்தமான புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, 2017 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்றாலும், அந்த தொடருடன் அணி கலைக்கப்பட்டது.
குஜராத் இந்தியாவின் விளையாட்டு மையமாக உருவெடுத்து வரும் நிலையில், வதோதராவை மையமாக வைத்து ஐபிஎல் அணி உருவாகுவது முக்கியத்துவம் பெறுகிறது.
இரு அணிகளும், தலா 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பீட்டை ஈர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தியமான முதலீட்டாளர்களில், ஐரோப்பிய தனியார் பங்கு நிறுவனமான பெர்மீரா, மேற்கு ஆசியாவின் இறையாண்மை செல்வ நிதிகள், ஆசிய அரசு ஆதரவு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய இந்திய வணிகக் குழுமங்கள், அமெரிக்காவைச் சேர்ந்த குடும்ப அலுவலகங்கள், மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களும் அடங்கும்.