விராட் கோலி ஃபார்மிற்கு வர கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்: டேனியல் வெட்டோரி அறிவுரை!
தனது பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நியுசிலாந்து அணியின் வீரர் டேனியல் வெட்டோரி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய முன்னணி வீரருமான விராட் கோலி தனது பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த சேகத்தில் முழ்கியுள்ளனர்.
சதங்களை சாதாரணமாக விளாசும் விராட் கோலி, சதங்களை கோட்டைவிட்டதில் சதம் கண்டுள்ளார், கடந்த 2016 ஐபிஎல் சீசனில் தனி ஒருவராக 973 ஒட்டங்கள் குவித்தார், ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல்-லில் இதுவரை விளையாடிய 8 போட்டியில் வெறும் 119 ஒட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
விராட் கோலி பார்ம் குறித்து ஐபிஎல் கமெண்டரி பேனலில் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலியை இப்படி பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் நிச்சயம் பார்முக்கு திரும்புவார், திரும்ப வேண்டும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இத்தகைய சூழ்நிலையை தானும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விராட் கோலி பார்ம் அவுட்டில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்றால் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஓபனிங் பேட்டிங் இறங்க வேண்டும் என நியுசிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் இவ்வாறு விராட் கோலி ஓபனிங் பேட்டிங்கில் களமிறங்கினால் அது அவர் மீது இருக்கும் அழுத்தம் குறைந்து சிறப்பாக பேட்டிங் செய்ய உதவும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.