கோலிக்கு என்னாச்சு? மீண்டும் தவறான முடிவு எடுத்ததால் படுதோல்வியடைந்த பெங்களூர் அணி... விமர்சிக்கும் ரசிகர்கள்
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியிடம் பெங்களூர் அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் கோலியின் தவறான முடிவுகளே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
14வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டி தற்போது அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ் என அனைவரும் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்தனர்.
19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், வெங்கடேஷ் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
READ - Andre Russell, Varun Chakaravarthy and Lockie Ferguson shared the spoils as #KKR beat #RCB by nine wickets in Match 31 of #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
More here - https://t.co/V0cliFcjSE #KKRvRCB
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் மற்றும் வெங்கடேஷ் விக்கெட் இழக்காமல் ரன்களைக் குவித்தனர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் கில் 48 ரன் எடுத்திருந்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார். ரஸல் ஸ்ரைக்குக்கு வந்து பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே வெங்கடேஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து கொல்கத்தாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்களைக் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. வெங்கடேஷ் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
A debut to remember for Venkatesh Iyer as he hits the winning runs for #KKR.#KKR win by 9 wickets.
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
Scorecard - https://t.co/1A9oYR0vsK #KKRvRCB #VIVOIPL pic.twitter.com/eKnHf8m6R6
இந்த போட்டியில் கோலி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார், இந்த நிலையில் அவரின் தவறான கேப்டன்ஷிப்பே தோல்விக்கு காரணமாக பேசப்படுகிறது. ஏனெனில் அபுதாபி மைதானம் அளவு பெரியது அதுமட்டுமின்றி சேஸிங்கிற்கு சாதகமான ஒரு மைதானம்.
இதனால் எப்போதும் இந்த மைதானத்தில் டாசில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீசவே விருப்பப்படும். ஆனால் கோலி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது.
சமீபகாலமாக கோலி எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வது போன்று இம்முறையும் பேட்டிங்கை தேர்வு செய்து பெங்களூரு அணியை சிக்கலில் தள்ளியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
A superb performance from #KKR. From start to finish, they were excellent, with all their bowlers doing a vital job.#RCB are all out for 92 runs with 1 over to spare.
Scorecard - https://t.co/1A9oYR0vsK #KKRvRCB #VIVOIPL pic.twitter.com/LBFbLTkVRf