வாத்தி கம்மிங் பாட்டுக்கு கும்பலாக குத்தாட்டம் போட்ட ஸ்மித், பண்ட், ரஹானே, தவான், அஸ்வின்! வைரலாகும் வீடியோ
விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி வீரர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னையில் கடந்த ஏப்ரல் 9ம் திகதி 2021 ஐபிஎல் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் பெங்களுரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது.
ஏப்ரல் 10ம் திகதி நடந்த 2வது லீக் போட்டியில் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் அணியின் பயோ பபுளில் இணைந்துள்ளனர்.
அந்த வரிசையில் தனிமைப்படுத்தல் முடிந்து அணியில் டெல்லி அணியில் இணைந்த அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சக வீரர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் டெல்லி அணிக்காக விளையாடும் தமிழக வீரர்கள் அஸ்வின் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியது வைரலானது.
Steve Smith and his #DelhiCapitals teammates shake a leg ??
— Sportskeeda India (@Sportskeeda) April 13, 2021
? Steve Smith#IPL2021 pic.twitter.com/7gGqaWVD5m
தற்போது, வைரலான வீடியோவில் பண்ட், ரஹானே, ஸ்மித், தவான், அஸ்வின், வோக்ஸ் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
குறித்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பர படப்பிடிப்பின் போது இந்நிகழ்வு நடந்துள்ளதாக தெரிகிறது.