ஆசையை தூண்டிவிட்டு ரசிகர்களை ஏமாற்றிய சென்னை: குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 29வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
நாணயச்சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை குவித்தது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே சொதப்பி வந்த சென்னை அணியின் முன்வரிசை வீரர் ரூத்ராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 73 ஓட்டங்களை சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே விக்கெட்கள் மளமளவென இழக்க, வெற்றி இலக்கான 170 ஓட்டங்களை அடைய அணி மிகவும் திணறும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் மூன்று ஓவர்களுக்கு உள்ளேயே முக்கிய 3 விக்கெட்களை குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்ததால் வெற்றி உறுதியான மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாண்டு 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் என பந்துகளை பறக்கவிட்டு 94 ஓட்டங்களை குவித்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரஷித் கானும் தனது பங்கிற்கு 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என பந்துகளை பறக்கவிட குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 170 ஓட்டங்களை அடைந்து வெற்றிப்பெற்றுள்ளது.
சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்த விராட் கோலி: திகைத்துப்போன அனுஷ்கா சர்மா!
பந்துவீச்சை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர் 4 ஓவர்கள் பந்து வீசி வெறும் 23 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளர்.
ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் என பந்துகளை பறக்கவிட்டு 94 ஓட்டங்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.