தூணாய் நின்ற டூ பிளெஸ்ஸிஸ்: அபார வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பையின் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதல் பேட்டிங்கில் களமிறங்குமாறு அழைத்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணியின் முன்னணி வீரர்களான அனுஜ் ராவத், கோலி மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர், இருப்பினும் பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக 64 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்களை குவித்தார்.
இதன்முலம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து, இரண்டாவ்து இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி இலக்கான 182 ஓட்டங்களை 20 ஓவர்கள் முடிவில் அடையமுடியாமல் தோல்வியை தழுவியது.
லக்னோ அணியில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களை சேர்த்து இருந்தார்.
இந்த போட்டியில் பந்துவீச்சை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
பெங்களூரு அணியின் வெற்றிக்கு தூணாக நின்ற அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹாட்ரிக் விக்கெட்களால் எதிரணி வீரர்களை கலங்கடித்த சாஹல்: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மனைவி!