பந்துவீச்சில் டஃப் கொடுத்த கொல்கத்தா; போராடி வென்றது பெங்களூரு!
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், 6-வது லீக் ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ஓட்டங்களும், உமேஷ் யாதவ் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் பெங்களூரு அணி தடுமாறியது. கேப்டன் டூ பிளசிஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். விராட் கோலி 12 ஓட்டங்களில் வெளியேறினார். டேவிட் வில்லி 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ஓட்டங்களிலும், ஷாபாஸ் அகமது 27 ஓட்டங்களிலும் வெளியேறினார்.
இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரூதர்போர்ட் 28, ஷபாஸ் அகமது 27 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சௌதி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரூதர்போர்ட் 28, ஷபாஸ் அகமது 27 ஓட்டங்கள் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சௌதி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.