டி20 ஆட்டத்தில் அடித்து விளையாடவே பார்ப்பார்கள்... தோனி அறிவுரை!
டி20 ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன் ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து விளையாடவே பார்ப்பார்கள் என சென்னை அணியின் நெட் பவுலர் சல்மான் கானிடம் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் என்பது சூதாட்டம், பணம் கொட்டும் வியாபாரம் என பலரால் விமர்சிக்கப்பட்டாலும், இந்த ஐபிஎல் போட்டிகள் திறமை வாய்ந்த இளம் இந்திய வீரர்களை கண்டறிவதிலும் முதன்மையாக இருக்கிறது.
மும்பையின் ஹர்திக் பாண்டியா முதல் தமிழகத்தின் நடராஜன் வரை இந்த ஐபிஎல் போட்டிகள் தான் அவர்களின் திறமையை இனம் கண்டு இந்திய அணியில் அவர்களுக்கான இருப்பிடம் வரை வழங்கியுள்ளது.
இந்த ஐபிஎல் போட்டிகள் திறமையான இளம் வீரர்களை கண்டறிவதுடன் மட்டும் இல்லாமல், சர்வதேச பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அனுபவம் மற்றும் அறிவுரையை பெற உதவிகரமாக இருக்கிறது.
அந்தவகையில், சென்னை அணியின் நெட் பவுலர் சல்மான் கானும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடம் பெற்ற அறிவுரையை பற்றி தெரிவித்துள்ளார்.
அதில், சென்னை அணியில் இருந்து நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதால் நான் உற்சாகமாக இருந்தேன், ஏனெனில் எனக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தோனியுடன் நடைபெற்ற உரையாடலின் போது, டி20 ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன் ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து விளையாடவே பார்ப்பார்கள் அதனால் எப்போதும் சிந்தித்து பந்து வீச வேண்டும் என அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரண்டு மாதங்கள் தன்னுடைய வாழ்வை மாற்றகூடும் எனவும் தெரிவித்துள்ளார்.