முதல் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பித்த ஜடேஜா: CSK-வை இனி தடுக்க முடியாது!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு பெரும் முதல் வெற்றியை அவரது மனைவிக்கு கேப்டன் ரவீந்திர ஜடேஜா சமர்ப்பித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி தொடங்கிய நிலையில் கடந்த சீசனின் சாம்பியன் என்ற பெருமையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது.
சீசன் தொடங்க சில நாள்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோனி தனது கேப்டன் பதிவில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
The Jadeja catch celebration ??#TATAIPL #CSKvRCB pic.twitter.com/u3zvE59I3k
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜடேஜாவின் தலைமையில் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே சறுக்கல் என சென்னை அணி விளையாண்ட முதல் நான்கு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களும் ஜடேஜாவிற்கு கேப்டன்சி தெரியவில்லை, அனுபவம் போதுமானதாக இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக சிஸேர்களும் பவுண்டரிகளும் பறக்கவிட்டு 20ஓவர்கள் முடிவில் 216 ஓட்டங்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா, இந்த வெற்றி நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பெரும் முதல் வெற்றி, முதல் வெற்றி என்பது எப்போதும் சிறப்பானது அதனால் இந்த வெற்றியை எனது மனைவி மற்றும் எனது மொத்த அணிக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
இந்த ஆட்டத்தில் அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் சிறப்பாக செயல்பட்டதாகவும், இந்த போக்கை இனி வரும் போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து கடைப்பிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் அணி நிர்வாகம் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், அனுபவ வீரர்களிடம் இருந்து நிறைய அனுபவங்களை தொடர்ந்து பெற்று வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.