"மிரட்டி கையெழுத்து வாங்கியது" மும்பை இந்தியன்ஸ் அணி: அஸ்வினிடம் CSK வீரர் அதிர்ச்சி பேட்டி!
மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாண்டு வரும் ராபின் உத்தப்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு, தனது ஐபிஎல்-லில் அனுபவங்களை குறித்து பேட்டியளித்துள்ளார்.
இதில் அவர் மும்பை அணியை குறித்து தெரிவித்துள்ள கருத்து ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.
அதில் தான் கடந்த 2008ம் ஆண்டு மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டு அந்த அணிக்காக விளையாண்டு வந்தபோது என்னை மிரட்டி வேறு அணிக்கு மாற்றும் ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு மிரட்டப்பட்டேன் என ராபின் உத்தப்பா தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக வேறு அணிக்கு மாற்றப்பட்ட வீரர் நான் தான், அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஏனெனில் என் நம்பிக்கை, விசுவாசம் அனைத்தும் மும்பை அணியின் மீது அதிகப்படியாக வைத்து இருந்தேன் எனவும் உத்தப்பா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதில் நான் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று சொல்ல விரும்பவில்லை ஆனால் முதலில் ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்கு மறுப்பு தெரிவித்தேன், அதனை தொடர்ந்து நீ இனி ஒருபோட்டியில் கூட விளையாட முடியாது என அந்த நபர் மிரட்டினார் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்...ரசிகர்களுக்கு இதய வலியை ஏற்படுத்தி குஜராத் அணி திரில் வெற்றி!