முதல் வெற்றியில் CSK: அப்பாடா ஜெயிச்சுட்டோம்... நிம்மதி பெருமூச்சில் சென்னை ரசிகர்கள்!
ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாண்ட நான்கு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், இன்று பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.
இந்தநிலையில் இன்று டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் மாலை 7:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை செய்தன, இதில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
The Jadeja catch celebration ??#TATAIPL #CSKvRCB pic.twitter.com/u3zvE59I3k
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாண்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர், தொடக்க ஆட்டக்காரன உத்தப்பா 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்களை குவித்து மிரட்டினார், மேலும் இவரை தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் டுபேயும் அவர் பங்கிற்கு 46பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் சேர்த்து மிரட்ட, சென்னை அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்திலேயே முக்கிய வீரர்களான டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்கள் பறிகொடுத்தது.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இருப்பினும் பெங்களூரு அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதனால் அடுத்தடுத்து தோல்வியை மட்டுமே சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிக்கணக்கை பெங்களூருக்கு எதிராக 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
மேலும் இந்த போட்டியில் அதிரடியாக விளையாண்ட சென்னை அணி வீரர் ஷிவம் டுபே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.