சென்னை அணிக்கு கேப்டனை விட, ஆல்-ரவுண்டர் ஜடேஜா தான் தேவை: தோனி கருத்து!
கேப்டன்சி பொறுப்பினால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கபடுகிறது என சென்னை ஆணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-லில் ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர், இதில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் விளையாடிய 8 போடிகளில் 8-ல்லும் தோல்வியடைந்ததை அடுத்து தனது பிளே-ஆஃப் கனவை இழந்துள்ளது.
இதைப்போலவே 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை விளையாடி உள்ள 9 போட்டிகளில் 3 மட்டுமே வென்றுள்ளது, இதனால் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவும் மிகவும் கடினமாகியுள்ளது.
சென்னை அணியின் இந்த இக்கட்டான நிலைமைக்கு, சென்னை அணியின் பந்துவீச்சும், ஜடேஜாவின் கேப்டன்சியில் உள்ள அனுபவமின்மையும் தான் காரணம் என கருத்துகள் வெளிவந்தன. மேலும் இதுவரை நடந்த போட்டிகளில் ஜடேஜாவின் ஆட்டமும் 112 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை என்ற மோசமான நிலையிலேயெ இருந்து வருகிறது.
இதையடுத்து, அதிகரித்து வந்த அழுத்ததின் காரணமாக சன்ரைசஸ் அணியுடனான போட்டியில், ஜடேஜா தனது கேப்டன்சி பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்கினார்.
அந்தப்போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதுடன், ஜடேஜாவை பற்றி தோனி பேசுகையில், கேப்டன்சியால் ஜடேஜாவின் ஆட்டம் பாதிக்கபடுகிறது, சென்னை அணிக்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா தான் அதிகமாக தேவை என தெரிவித்துள்ளார்.