ஹிட் அவுட்டான சாய் சுதர்ஷன்: மும்பை குஜராத் போட்டியில் திருப்புமுனை சம்பவம்: வீடியோ!
பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் அவுட்டானது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
2022ம் ஆண்டுகான ஐபிஎல் போட்டிகளின் 51வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிரபோர்ன் மைதானத்தில் நேற்று மோதின.
இந்த போட்டியில் கடைசி ஓவருக்கு வெரும் 8 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற சுலபமான இலக்கை குஜராத் அணி எடுக்க தவறவே, மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
— Diving Slip (@SlipDiving) May 6, 2022
மும்பை அணி நிர்ணயித்த 178 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைவதற்கு கடைசி 25 பந்துகளில் வெறும் 40 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற எளிமையான இலக்கை அடைய முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியை சந்திதுள்ளது.
இந்தபோட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்ஷன் ஹிட் அவுட்டானது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக மாறிவிட்டது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 16வது ஓவரை மும்பை அணி வீரர் பொலார்ட் ஓடி வந்து வீச அந்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சாய் சுதர்ஷன் தோள்பட்டைக்கு மேல் எழும்பியது, இதனை சாய் சுதர்சன் புல் சாட் அடிக்க மட்டையை(bat) வேகமாக சுழற்றினார், அப்போது சாய் சுதர்சன் மட்டை ஸ்டம்பில் பட்டு ஹிட் அவுட் ஆனார்.
சாய் சுதர்சன் மட்டை ஸ்டம்பில் பட்டு விளக்கு பிரகாசம் தெரியவே, மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் முகத்திலும் பிரகாசமான ஓளி காணப்பட்டது.
இந்த நிலையில், சாய் சுதர்சன் மட்டை சுற்றி ஹிட் அவுட் ஆனது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.