குல்தீப் சுழலில் சிக்கி சிதைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெற்றிப்பாதைக்கு திரும்பிய டெல்லி!
ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல்-லின் 19வது லீக் போட்டி மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் வார்னர் ஜோடி கொல்கத்தா அணியின் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்கவிடவே அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது.
இந்த ஜோடி முதல் 8 ஓவர்களிலேயே 93 ஓட்டங்களை சேர்த்ததுடன் மட்டுமில்லமல் இருவரும் வெற்றிகரமாக அவர்களது அரைசதங்களையும் கடந்தனர், அதில் பிருத்வி ஷா 51 ஓட்டங்களையும், வார்னர் 61 ஓட்டங்களையும் குவித்தனர்.
Stay here for all the updates and highlights as the #KKRvDC match between @KKRiders and @DelhiCapitals goes underway at the Brabourne Stadium in Mumbai.https://t.co/mLPR4yGoud
— Twitter Moments India (@MomentsIndia) April 10, 2022
இதைடுத்து அடுத்தடுத்த வந்த வீரர்களும் அணியின் ஸ்கோர்களை உயர்த்தும் பணியை சிறப்பாக செய்யவே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்தது.
இதனை தொடர்ந்து 216 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
கொல்கத்தா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை சேர்த்தார், டெல்லி அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 35 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது, இதைத்தொடர்ந்து டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணியின் 4 விக்கெட்களை வீழ்த்தி டெல்லி அணியை வெற்றிபெற செய்ததற்காக அந்த அணியின் விரர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தனது வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
தோல்விக்கு போட்டிபோடும் சென்னை மும்பை அணிகள்: வெற்றியை தட்டிச்சென்ற பெங்களூரு அணி!