மும்பை அணியை பந்தாடிய பேட் கம்மின்ஸ்: தொடர் தோல்வி முகத்தில் சென்னை மும்பை அணிகள்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.
ஐபிஎல்-லில் முன்னனி அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 14வது ஐபிஎல் லீக் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது.
WHAT. A. KNOCK ?#KKRHaiTaiyaar #KKRvMI #IPL2022pic.twitter.com/RmLZjZdzl3
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2022
தொடக்கத்தில் விக்கெட்களை பறிகொடுத்து ஓட்டங்களை சேர்க்க மிகவும் தடுமாறிய மும்பை அணி ஆட்டத்தின் இறுதியாக களமிறங்கிய பொல்லார்ட் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடியால் 161 ஓட்டங்களை இறுதியாக சேர்த்து.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் இழந்து இலக்கை அடைவதில் தடுமாறி வந்தது.
ஒருபுறம் வெங்கடேஷ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே வர, 6வது விக்கெட்க்கு களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்து அணியை 16 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்து சென்றார்.
15 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்து அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ் ஆட்டத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.